இராக்கால மேகங்கள் :-
கறுப்புக் கடலால்
துண்டாகிப்போன
குட்டித் தீவுகள்.
கடலால் சூழப்பட்ட
தீபகற்பங்கள்.
கட்சிக்குக் கட்சி
தாவும் குட்டி
அரசியல்வாதிகள்.
மழைக்காலத்தில்
அங்கங்கே
தேங்கிக் குழம்பிச்
சேறாய்க் கிடக்கும்
குட்டிக்குட்டைகள்.
நம்பிக்கை விதைகளை
நயவஞ்சகமாகத் தூவும்
ஆண்களின் பேச்சுகள்.
-- 84 ஆம் வருட டைரி.
4 கருத்துகள்:
சிறப்பான வரிகள்! அருமை!
இவை அத்தனையையும் ஒரே சமயத்தில் காணக் கிடைத்தவையா? வெவ்வேறு சமயங்களில் கண்டவையா? எப்படி இருந்தாலும் மேகத்தை கவனிக்க முடிவது ஒரு வரம்தான்.
நன்றி சுரேஷ் சகோ
வெவ்வேறு சமயத்தில் கண்டவற்றை நினைவில் கூட்டிப் பகிர்ந்துள்ளேன் பானுமதி மேடம். உங்க முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))