நாம் நடத்தவேண்டியது
நாடகங்களல்ல
நாம் வந்திருப்பது
நடிப்பதற்குமல்ல.
நமக்குள்ளிருந்து நானைப் பிரித்து
நம்மைப் பிறரை அன்பு செய்வோம்.
துர்க்கைகள் அடக்கப்பட்டு இருப்பது
சட்டங்களில் மட்டுமல்ல
மரச்சட்டங்களிலும்தான்.
கோயில் பாவைகள்
கசியவிட்டுக் கொண்டிருப்பது
எண்ணெயை மட்டுமல்ல
இயலாமையையும்தான்.
கர்ப்பக்கிரகச் சிற்பங்கள்
ஏற்றுகொண்டிருப்பது
கறுப்புக் களிம்பை மட்டுமல்ல
அடக்கத்தையும்தான்.
அரக்கர்களை
அழிக்கத்தான் முடியவில்லை
வாருங்கள் தேவதைகளே. !
ப்ரியம்
அளித்தாவது தொலைப்போமே. !
டிஸ்கி :- 1984 ஆம் வருட டைரி.
டிஸ்கி :- 1984 ஆம் வருட டைரி.
3 கருத்துகள்:
அருமை... "நான்" இருந்தால் சங்கடம் தான்...
ஆம் தனபாலன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))