எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 26 பிப்ரவரி, 2015

காரணப் படகு.

காரணங்களால் அடுக்கப்பட்ட படகு
தத்தளிக்கிறது சுற்றிச் சுழன்று.
எந்தக் காரணமும்
இறங்கமாட்டேனென்று அடம்பிடிக்க
மேலும் சில காரணங்கள்
ஏறிக்கொள்ளக் காத்திருக்க
காற்று வீசும் திசையில்
கவிழத் துவங்குகிறது படகு.
படகும் ஓட்டையும் காரணங்களும்
பாரபட்சமில்லாமல் மூழ்குகின்றன.
தின்னப்பட்ட காரணங்கள் குமிழாய்க் கரைய
எங்கெங்கும் காற்றும் நீரும் மட்டுமே
நிரம்பியிருக்கின்றது.

5 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை சகோ....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவ்ளோ தான்...! வாழ்க்கையும்...!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கில்லர்ஜி சகோ

ஆமாம் தனபாலன் சகோ

kingraj சொன்னது…

காரணங்கள் சொல்லி சொல்லியே வீணாய் போகிறோம்.... கவிழ்ந்துவிட்ட படகு போல..... அருமை

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்துக்கு நன்றி கிங் ராஜ் சார்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...