நீ ஒரு முட்டாள்
உன்னிடம் இருப்பது
ப்ரதி பிம்பம்தான்
அசல் என்னிடம்
மலையின் உச்சிகள்
உன் கைக்கடக்கமாய் இருப்பதாய்
ஆற்றில் சலனம்
உன் கண்ணசைவுகளால் ஜீவித்திருப்பதாய்,
மரங்கள் உனக்காய்
வஸந்தம் தெளித்துப் பூப்படுக்கை விரிப்பதாய்
சமுதாயம் உன்
வீரியமிக்க சொல்கேட்டுச் சுரணைபெறும் என்பதாய்
வானவில் உன்னால்தான்
சந்தோஷவர்ணம் பூசிக்கொண்டது என்பதாய்
மேகங்கள் குச்சியில்லாப்
பஞ்சுமிட்டாயாக உலாவருவது
உனக்கென நினைத்தால்
நீ சர்வ முட்டாள்
நண்பர்கள் சந்தோஷித்திருப்பது
உன்னாலென நினைத்தால்
பூக்கள் பருவரகசியம்
பேசிக்களிப்பது உனக்கென நினைத்தால்
வானம் குளிர்ச்சியான
இருட்டுப் பூசிக்கொள்வது
சிற்றூரின் வயல்புறங்கள்
பச்சை மஞ்சள் பூசிப்
பனிக்குளித்துத் தலை உலாத்துவது
உனக்கென நினைத்தால்
நீ ஒரு அடி முட்டாள்
மனிதர்கள் சுயமாய் இருப்பது
தெய்வங்கள் என்ற பெருமிதத்தில்
நில்லாமல் உண்மையாய் இருப்பது
பகட்டு வார்த்தைப் பூசல்கள் மேக்கப்கள்
இல்லாமல் கோபப்பட்டு அதட்டி
உரிமை பேசி மகி்ழ்ந்திருப்பது
உன்னிடம் மட்டுமே என நீ நினைத்தால்
நீ படு முட்டாள்
இதையெல்லாம் ஒரு
சின்னப் புன்னகையால்
அலட்சியப்படுத்தத் தெரியாவிட்டால்
நீதான் மோசமான முட்டாள்.
--- 85 ஆம் வருட டைரி.
--- 85 ஆம் வருட டைரி.
3 கருத்துகள்:
அருமை... உண்மை...
கருத்துக்கு நன்றி தனபாலன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))