எல்லா மொக்குகளும்
பூத்துத் தீர்த்தாயிற்று.
காய்கனிகளும்
கனிந்திறங்கியாயிற்று.
இலைகளையும் உதிர்த்து
சாமக்கிரியை செய்கிறது மரம்.
கோரக் கிளைகள் வானிறைஞ்ச
வேரோடிய கால்களோடு
தள்ளாடித் தவிக்கிறது.
முதிய மரம் பாடத் துவங்குகிறது
தனக்கான ஒப்பாரியோ தாலாட்டோ..
முறிந்த கிளையில்
மெல்லிறங்கும் மழை
ஒற்றைப் பூவாய்த் தொற்றி நிற்க
பூமி பதிந்து தருவாய்த்
தானிருந்த காலம் புலப்பட
நடுங்கும் நரம்புகளோடு
மஞ்சள் ரத்தமாய் சூரியனிறங்க
பச்சையம் சூல்கொண்டு
மீள் பிறப்புக்காய்க் காத்திருக்கிறது.
பூத்துத் தீர்த்தாயிற்று.
காய்கனிகளும்
கனிந்திறங்கியாயிற்று.
இலைகளையும் உதிர்த்து
சாமக்கிரியை செய்கிறது மரம்.
கோரக் கிளைகள் வானிறைஞ்ச
வேரோடிய கால்களோடு
தள்ளாடித் தவிக்கிறது.
முதிய மரம் பாடத் துவங்குகிறது
தனக்கான ஒப்பாரியோ தாலாட்டோ..
முறிந்த கிளையில்
மெல்லிறங்கும் மழை
ஒற்றைப் பூவாய்த் தொற்றி நிற்க
பூமி பதிந்து தருவாய்த்
தானிருந்த காலம் புலப்பட
நடுங்கும் நரம்புகளோடு
மஞ்சள் ரத்தமாய் சூரியனிறங்க
பச்சையம் சூல்கொண்டு
மீள் பிறப்புக்காய்க் காத்திருக்கிறது.
3 கருத்துகள்:
மீள் பிறப்பு கவிதை மிக அருமை.
வாழ்த்துக்கள்.
கோ
நன்றி கோயில் பிள்ளை.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))