சலனங்கள்:-
பேனாக்கூர்களால்
அடிக்கடி
மனத்துணி
ஒட்டுப்போட்டுக்
கொள்ளும்
நானெப்பொழுது
என்னுள்
கிழிந்துபோனேன்.?
ஸ்வயமே
உலகமாய்
உலகமே
ஸ்வயமாய்
தோட்டக்காரனுக்குத்
தெரியாமல்
சுவற்றுக்கு
வெளியே
இந்தமரங்கள்
எப்படி வேர்விட்டன.
வேராடல்
வேரோடல்
சட்டத்துக்குப்
புறம்போ?
விதைகளே
இல்லாமல்
இந்தச்
செடிகள்
எப்படி
முளைவிட்டன
கௌரவப்
போர்வைக்கு
எத்தனை
கிழிசல்கள் ?
உடைகளே
இல்லாமல்
இந்த
ஆத்மா நிர்வாணத்தில்
எத்தனை
அசிங்கங்கள்?
எண்ணக்
குப்பைகள்
கெல்லி
எறிய
சிறுத்துத்
துளிர்க்கும்
எண்ணக்
குப்பைகள்..
ஆக்ஸிஜன்
வாழ்வின்நாசிக்குள்
புக
பயந்து இருக்கின்ற
பூக்கள்
தோறும் சுற்றித் திரியும்.
-- 84 ஆம் வருட டைரி.
-- 84 ஆம் வருட டைரி.
3 கருத்துகள்:
உடைகளே இல்லாமல்
இந்த ஆத்மா நிர்வாணத்தில்
எத்தனை அசிங்கங்கள்?
அருமையான வரிகள்... மிக அற்புதமான கவிதை...
அதிலும் நிறைவாய் நிறைந்த வார்த்தைகள்...
ஆக்ஸிஜன் வாழ்வின்நாசிக்குள்
புக பயந்து இருக்கின்ற
பூக்கள் தோறும் சுற்றித் திரியும்
மிக அருமை..... மனதோடு ரசித்தேன்.
நன்றி சாய்ரோஸ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))