பூனை
நடை:-
தேரைகளற்ற
கல்லைச்
செதுக்கிச்
சிற்பம்.
உளி
கொண்டு அடித்து
சுத்தியல்
கொண்டு அறைந்து
இழைப்புளி
தோலுரிக்க
சுயமெல்லாம்
உரிந்து
நியான்
அறைகளுக்குள்
தனக்கென
அற்றுப் பிறருக்காய்
துவாரங்களற்ற
பொம்மையாய்
காட்சிப்
பொருளாய்
பூனை
நடையிடும்.
புல்பிடுங்குதலாய்
புருவம்
செதுக்குதலே புண்படுத்த
அடிக்கடிப்
புதுப்பித்தல்
செயற்கை
அழகவஸ்தை.
கொடிகள்
பின்னிய
கானக
நதிகளில்
இயற்கை
இழைத்துச்
சிரிக்கும்
சாளக்கிராமங்கள்.
வாயோரம்
முலைப்பாலுறைந்த
பச்சைக்
குழந்தைகள்.
3 கருத்துகள்:
என்னவொரு ஒப்பீடு...!
கருத்துக்கு நன்றி தனபாலன் சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))