குரலின்
சாயங்கள்
சாயங்கால
வெய்யிலாய்
நீர்த்துப்போய்க்
கொண்டிருக்கின்றன.
கிளறிக்
கிளறிக் கரம்பைகளில்
கருவைகளைப்
பயிரிடுகிறார்கள்.
காற்றின்
ஈரப்பதம் உறிஞ்சிக்
கோரைப்பற்களாய்
அதன் முட்கள்
அகநிர்வாணம்
மறந்து
புறநிர்வாணம்
தேடியவன்
பல்
பேழைக்குள்
அதைத்
தூர்த்துத் தூர்த்து
ஆன்மாவின்
கழிவறையாக்கி
முள்வேலிகளுக்குள்
கொட்டிலிட்டவன்
முகம்
கோழைக்குள்.

3 கருத்துகள்:
அருமை...
நன்றி தனபாலன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))