எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 டிசம்பர், 2014

பூப்புன்னகையும் நுரைப்புன்னகையும் :-



பூப்புன்னகையும் நுரைப்புன்னகையும் :-

நீ நீயாகவே இருக்கிறாய்
நான்தான் நானாக இல்லை.
எஞ்சியது
கரையோரத் தாவரமாய்
என் பூப்புன்னகையும்
கரை கடந்த தாவரமாய்
உன் நுரைப்புன்னகையும்

எதையும் எளிதாக எடுக்கும்
மனப்பக்குவம் உனக்கு
எல்லாவற்றையும் பெரிதாக்கிப் பார்க்கும்
மனக்களிப்பு எனக்கு

உன் ஓட்டத்தில் நீயிருக்க
என் காலடியில் கட்டிவிடும்
முயற்சியில் நான்
வேர்களும் கிளைகளும் விரித்து
இடையறாது ஓடும் உன்னைத் தடுத்து
இளவேனிலோ முதுபனியோ
இடமோ காலமோ அற்று
என் சுவாசம் போல நொடிக்கொருதரம்
இயல்பாய் நிரம்பும் உன் நினைவும்.
இமைகாக்கும் கண்போல விழித்துக்கிடக்கும்
எந்நேரமும் உன் மேலான அன்பும்.

5 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அற்புதம்
ஒரு கவிதையேனும் இப்படி
மீண்டும் மீண்டும் படித்து ரசிக்கும்படியாக
எழுத வேண்டும் என்கிற எண்ணம் என்னுள் வந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா மிக்க நன்றி ரமணி சகோ !!! :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அன்பு என்றும் வேண்டும்... அருமை சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...