ராதேஷ்யாம்:-
தெய்வத்திற்காகப்
பிறப்பெடுத்துக்
காத்திருக்கும்
மானுடம்
முன்பிருந்து
வரவேற்க
கைகளில்
ஏந்திக்கொள்ள
ஞானஸ்நான
மோசஸாய்.
கைக்கிளையோ
பெருந்திணையோ
கள்வனின்
காதலி
கன்னமிட்ட
கண்ணன்
குழந்தையாய்,
காதலனாய்
காவலனாய்
தாமரைக்
கண்ணன்
தாமிரக்
கால்களால்
விரிந்தெழுந்த
நாகத்தின்
சிரசடைந்த
குண்டலியை
அமிர்த
தாரையாக்கி
ராசலீலை
ராசக்க்ரீடை
அகநிர்வாணம்
புரிய
ஆடைகள்
திருடுவதாய்
ஆரணங்குகள்
திருடி
மாயா
தத்துவம்
ராகவப்
ப்ரேமி
கருநீலவண்ணனின்
பாமா
ருக்மணி
கோபிகா
துளசி
பிருந்தா
ஆண்டாள்
மீரா,
ஆழ்வார்கள்
அனைத்தும்
ராதே ரூபம்.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))