எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 டிசம்பர், 2014

சொல்.

உறவினர்களுக்கா,
நண்பர்களுக்கா,
என்னைப் போல எழுதுபவர்களுக்கா
தொடர்பற்றவர்களுக்கா..
சொல்ல முடியுமா
சொல்லலாமா கூடாதா.
சொல்லித் தீருமா
சொல்லில் அடங்குமா
சொல்சுவை கெடுமா,
சொல்பதம் புரியுமா
சொல்கேடு விளையுமா
சொல்லாகுமா வில்லாகுமா
சொல்வினை வைக்குமா
சொல் திரிபு உலவுமா
சொல்லச்சம்
சொல்லடக்கி
செல்லவைக்கிறது என்னை தினமும்.
சொல்லில் அடங்காச்
சொல்சுமந்து திரும்பிவிடுகிறேன்.
மூலக்கூறுகளின் மேலெல்லாம்
பயணித்துக் கொண்டிருக்கின்றன
சொல்லப்படாத சொற்கள்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அசத்தல்...

வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...