எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அபிப்ராயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அபிப்ராயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 நவம்பர், 2012

அபிப்ராயங்கள்

அபிப்ராயங்கள்:-
*********************
கால்களற்றவன்
கைச்சக்கரங்களால்
கடந்துபோய்க்கொண்டிருக்கிறான்.


கண்கள்வழி
கருணை கசிந்துவிடாதிருக்கவும்
புன்முறுவல் பொங்கிவிடாதிருக்கவும்

யத்தனிக்கிறேன்.

கடுமையான பாவனைகளால்
கல்லாகிறது முகம்.,
அவனை எந்த விதத்திலும்
காயப்படுத்தாத சந்தோஷத்துடன்.

யதார்த்தமாய்க் கடக்கும் அவன்
யோசித்தபடி செல்கிறான்.,
முறுவல்கள்கூட அற்ற முகம்..
பாவம் என்ன பிரச்சனையோ..

Related Posts Plugin for WordPress, Blogger...