எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 மே, 2016

எண்ண அலைகள்



. ஏன்,
அன்பு கூடத்தான்.
யாரிடமும்
எந்தச் சூழ்நிலையிலும்
அன்பை ஆதரவை
எதிர்பார்த்து ஏங்கக்கூடாது
அன்பை உறுதிப்படுத்தப்
பல சோதனைகள் செய்து
இப்போது அது
ஆவியாகிப் போனபின்பு
எங்கேயெனத் தேட வேண்டியதாயிற்று.
என்னுடைய வஸந்தம் எங்கே ?
வஸந்த காலங்கள் எங்கே ?
எல்லாம் கனவா ?
உண்மையிலேயே என்னைத் தவிக்க
விட்டுச் சென்றுவிட்டதா ?
என் கையே என் கண்ணைக்
குத்துமா ?
ஆமாம்.
குத்திக் கிழித்துவிட்டதே.
நான் கேட்கின்ற எதுவுமே
எனக்குக் கொடுக்கப்பட மாட்டாது.
அது ஏனோ தெரியவில்லை.
என் மீது எனக்கே
நம்பிக்கையில்லை.
எங்கே தவறிவிடுவேனோ என்று.!
வெறுப்புக் கொண்ட ஒரு பொருளை
நினைக்காதே நினைக்காதே
என நினைத்துக் கொண்டிருப்பதன் மூலம்
அந்தப் பொருளை
நினைத்துக் கொண்டுதானே இருக்கின்றது
மனம்.?
மனுஷ்ய சக்திக்குப் பயப்பட்ட
என்னால்
தேவ அன்பின் முன்
தலைவணங்க முடியவில்லை.
அது ஏன் ? புரியவில்லை. ?
இதயப் பாலங்கள் உடைகின்றன
எண்ண அலைகள் ஓய்கின்றன.

-- 82 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...