என் இதயத்தின் இமைகள்
இரத்தக் கண்ணீர் வடித்து
அழுதுகொண்டே விம்முகின்றன.
நீ வருவாய் என நம்பி
எந்நேரமும் கண்விழித்துக்
காத்திருப்பதால்
தூங்கவே முடிவதில்லையாம்.
என் இதயத்தின்
வாயிற்கதவுகளுக்கு
நான் ஒரு
பூட்டைத் தயார்ப்பண்ணி
வைத்துள்ளேன்.
நீ உள்ளே சென்றவுடன்
இழுத்துப் பூட்டுவதற்குத்தான். !
நினைவுப் பறவை பறக்கிறது !
எண்ணக் கூட்டுக்குள் தேடினேன் !
புரிகிறதா உனக்கு.. !
-- 80 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))