எரிச்சல் 1.
காக்கைகள் கறுப்பணிந்து
நெருப்பில் ஊர்வலம் போகும்
கோயில் பண்டாரம்
தொப்பை குலுங்கக்
கெக்கலித்துச் சிரிப்பான்.
மத்யான வெய்யில்
மரவட்டையாய் ஊரும்.
சிகப்புப் பூரானாய்க்
கடிக்கும்.
மரங்கள்
கறுப்பு ராட்சசிகளாய்
மண்டை பிடுங்கும்.
பொங்கல் பானையில்
உலைநீர் ஆர்ப்பரிக்கும்
புகை சட்டியிடுப்புக்குச்
சந்தனம் பூசும்.
சிரிப்பு ஓடிக்களைத்து
தாண்டிப்போன
பார்வை வேர் தடுக்கிக்
கீழ்விழுந்து யோசிக்கும்.
கைகள் யாசிப்பதை வெறுத்து
மனமேட்டைக் குழிபறித்துச்
செடி சிதைத்துப் போடும்.
மனப் பொங்கல் மட்டும்
பங்கிட்டுக்கொள்ள ஆளில்லாமல்
அடுப்பில் கிடந்து
வக்கரித்து அடிப்பிடிக்கும்.
-- 1983 ஆம் வருட டைரியிலிருந்து.
-- 1983 ஆம் வருட டைரியிலிருந்து.
3 கருத்துகள்:
சிந்திக்க வைத்தன வரிகள் அருமை சகோ.
சில சமயம் இப்படித்தான்...
நன்றி கில்லர்ஜி சகோ
நன்றி தனபாலன் சகோ.
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))