எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 19 ஜனவரி, 2015

கோழி மண்ணிலிட்ட கோலம்.



சிறந்த வாசகனாய் அமையத்
தகுதியில்லை.
திறனாய்வு செய்யவும்
தெரிவதில்லை
திறமையிருந்தும்
தலையெழுத்தைப் போலக்
கையெழுத்தும் சகிக்கவில்லை

கோழி மண்ணிலிட்ட கோலமாய்த்
தன்னிஷ்டத்துக்கு மண்ணில் வேர்பரப்பும்
ஏலச்செடியாய்
புதியவர்களை இரசிக்க வைக்கும்
மார்டன் ஆர்ட்டாய்
அவசரத்தில் உதறிய
தூரிகைத் தெளிப்பாய்
எண்ணங்களைத் தூவலாய்க்
கொட்டித் தீர்க்கும்போது
பதற்றத்தில் பிறப்பெடுத்த
காட்டாற்றின் கிறுக்கலாய்
மெழுகுவர்த்தியின் கறுப்புக்காயமாய்
பேச ஆசையிருந்தும்
பிதற்றிக்கொட்டும் ஊமையழுகையாய்
அருவி நீரின் பிண்டுபோன
வீழ்ச்சி வளைசலாய்
பிரம்மனின் கையெழுத்தைப் பார்த்து
அரிச்சுவடி கற்றுக்கொண்டதன் விளைவாய்
பிறப்பிலிருந்து ஒன்றிவிட்ட ஒன்றை
நினைத்தாலும் மாற்ற முடிவதில்லை
என் செய்வது ?!

3 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அமைதி...

Thenammai Lakshmanan சொன்னது…

:)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...