கலைவாணியும்
கணக்காய்வாளரும் :-
காகிதங்கள்
கண்டுபிடிக்குமுன்
கலைவாணிக்கு
வீணை வாசிப்பு.
கானாமிர்தம்
என்னாமல்
வீணாமிர்தம்
என்பார் கணக்கர்.
நோட்டுகள்
எழுதப்படவே என
கலைவாணி
கிறுக்கித் தள்ள
கணக்காய்வாளருக்கோ
நோட்டுகள்
எண்ணப்படவே
குறுந்தொகையை
வெளியிட
கலைவாணி
கேட்டுக்கொண்டது பெருந்தொகை.
வெறுங்கை
முழம்போடமுடியுமா
வீணையை
உற்றுநோக்கி நங்கை.
வரவுசெலவு
பற்றுவரவு அறிந்த அவள்
ஐந்தொகை
பேரேடு அறியவில்லை.
அளந்துபோடும்
கணக்காளருக்குக்
கணக்கும்
கவிதையாகுமென உணர்ந்துகொண்டாள்.
3 கருத்துகள்:
அருமை... வித்தியாசமான சிந்தனை....
நன்றி தனபாலன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))