எந்த
நட்பும்
சுவர்களோடும்
கதவுகளோடும்
நின்றுவிடுவதில்லை
நின்று
நிலைக்கும் சில
நினைவில்
கல்வெட்டாய்
சிலது
லாடமாய்
குளம்புகளைக் கிழித்தாலும்
நின்று
நிலைத்து ஓட
துளிர்த்திருந்த
இலையை
கிள்ளிப்
போட்டு சருகாக்கி
தூளாக
மிதித்தும் அடங்காமல்
வெறுப்பு
மண்டிய கணங்களில்
இழுத்துப்
பூட்டிக் கொண்டோம்.
கதவுகளையும்
ஜன்னல்களையும்
சுவற்றையும்
கூட.
தேடியலையும்
தவிப்புக் கூட
தெரிவராத
அளவு இருப்பையே
உள்ளிழுத்து
அடைத்துக்கொண்டு
உன்
தெருவழியே போறவரும்
என்
தெருவழியே போறவரும்
கலந்து
பேசினால் உண்டு
நம்மைப்
பற்றி.
புதுப்
புனலாய் நீ பொங்கியெழுவதும்
பூச்செடியாய்
நான் பூத்துத் தள்ளுவதும்
நாம்
கலந்து கொள்ளாமலேயே
நம்முள்
கலந்துகொண்டு.
அதீதமே
முயக்கும்போது
அணைக்குள்ளோ
மதகுள்ளோ
கிடப்பதே
சுகம்.
3 கருத்துகள்:
ம்ம்.. சூப்பரா இருக்கு. வெறுப்பு கூடும்போது நம்மையும் சேர்த்தே பூட்டிக்கொள்கிறோம்.
அருமை... உண்மை சகோதரி....
ஆம் உண்மைதான் விச்சு சகோ கருத்துக்கு நன்றி
நன்றி தனபாலன் சகோ.
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))