எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 டிசம்பர், 2012

என் கடவுள்.

என்னுடைய கடவுள்
என்னைவிட எளிமை .

செல்ஃப் என்னும் ஒற்றைமாடப்
புறாக்கூண்டாய் அவர் வீடும்.

உடுத்த ஒற்றையாடை
மேலும் கேட்பதில்லை
பிசுக்கானாலும்
துவைக்கும்படியும்.

இரத்த அழுத்தம்
இனிப்புநீர் இல்லை அவர்க்கு,
இருந்தும் என் பத்தியச் சாப்பாடே..

சம்பா, சாத்தமுது
விக்கிவிடக்கூடாதேயென
சிறிது தண்ணீர் படைப்பேன்.

சிறிய வாகனம்தான் அவரது.
வீணாக அடிபட்டு
வருந்த வைப்பதில்லை.

வயதாவதும்
நரைப்பதும் குறித்த
கவலைகள் அவர்க்கில்லை.

என்னை உயர்த்துவார் என நானும்
அவரை இன்னும் நல்ல இடத்தில்
வைத்துக் கொள்வேன் என அவரும்
காத்திருக்கிறோம்..

10 கருத்துகள்:

semmalai akash சொன்னது…

என்னை உயர்த்துவார் என நானும்
அவரை இன்னும் நல்ல இடத்தில்
வைத்துக் கொள்வேன் என அவரும்
காத்திருக்கிறோம்..

அற்புதமான வரிகள். மிகவும் ரசித்தேன்.

A. Manavalan சொன்னது…

என்னை உயர்த்துவார் என நானும்
அவரை இன்னும் நல்ல இடத்தில்
வைத்துக் கொள்வேன் என அவரும்
காத்திருக்கிறோம்..

- Nalla varigal.

சுரேகா சொன்னது…

சூப்பர்ங்க! மிக மிக அருமை! தெய்வத்தின் மீதான நம் பாவனைகள் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.

கலக்குங்க தேனம்மை ஜி!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி செம்மலை ஆகாஷ்

நன்றி மணவாளன்

நன்றி சுரேகா

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

shanmugampoem2017.blogspot.com சொன்னது…

i love your style of writing

Shavin Earthy சொன்னது…

உங்கள் கடவுள் காப்பியம் பிடித்திருந்தது . என் கடவுளின் link - ஐ கீழே குறிபிட்டுள்ளேன் , முடிந்தால் அவரை சந்திக்கவும் . நன்றி சகோதரி

http://earthymooncat.blogspot.in/2012/04/blog-post.html

valampuri lena சொன்னது…

ungal mugavari tharalama ennidam ulla booksai anuppukiren

Thenammai Lakshmanan சொன்னது…

valampuri lena.. ungka e mail id ya kodutha en address i anuppi vaikiren..

sivakaran சொன்னது…

சூப்பர்ங்க! மிக மிக அருமை :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...