நினைவுப் புகைக் கூண்டுக்குள்
காற்றுக் க்ரீடை செய்வோம்
வா.
மனநுனிகள் புகையடிக்காமல்
வெய்யில் சுறா கடிக்க வருமுன்
சீக்கிரமாய்
சீக்கிரமாய்
முகங்கள்
புன்னகைப் பனிக்குள்
உறைந்திருக்கும்போதே
புகைச் சுழலுக்குள்
ஸ்நேகமாய் ஒருதரம்
முங்குவோம் வா
மந்தைகளின்
கொம்புகளுக்கும்
கூர்பற்களுக்கும் நாம்
இரையாவதற்குமுன்
தடம்பார்த்து
நமக்குரிய வண்டிகள்
பிடிப்போம் வா
தார்மீகக் காரணங்கள்
ஆராய்ந்து
ஒற்றுமைகள் புலப்படுத்தி
ஒன்றாய்க் கரை சேருவோம்
வலை மீளுவோம் வா
மழையின் அவசரமாய்
சாகரத்தின் தாகமாய்
சீக்கிரம்
சீக்கிரம்.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி