அதோ ஒரு இலை விழப்போகிறது.
அதோ ஒரு இலை விழப்போகிறது
வட்டக்குளத்தில் சலனத்தைப் புதைத்து
சலனத்தை எழுப்ப
அது காத்திருக்கிறது.
காற்றின் பரிதலுக்காய்
வேர்கள் தேடி அலுத்துப்போன நீரைப்
பழுத்த இலை ஸ்பரிசிக்கப்போகிறது.
சல்லிவேர்கள் சள்ளைப்படும்.
இலையோ மரத்தில் தொற்றிகொண்டு
நீரின் முத்தத்துக்காய் ஏங்கும்.
ராமனுக்குக் காத்திருக்கும் அகலிகைக்கல்லாய்
ராமனுக்குத் தவமிருந்த சீதையாய்
பிணைப்புகளில் விடுபட அந்தப்
பழுத்த இலை துடிக்கிறது.
மெல்லிய காற்றுவருடலில்
மூச்சு வாங்கி விட்டுத் தவிக்கிறது.
ஒரு பெரிய அலைக்காற்றை
எதிர்நோக்கி இருக்கிறது
அதோ ஓர் இலை
விழப்போகிறது.
4 கருத்துகள்:
இலை விழும் நேரம்... கவிதை இழை விடும் நேரம்....
அஹா அருமை துபாய் ராஜா. கருத்துக்கு நன்றி :)
அருமை ...
நன்றி டிடி சகோ :)
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))