வடிகால்கள்:-
ப்ரவாகிக்கும் வெள்ளத்துக்கு
வடிகால் அவசியம்
ஆக்ரோஷமாய்க் கொண்டாடவோ
அமைதியின்றி உருளவோ
அன்பை வர்ஷிப்பதற்கோ
வடிகால் தேவை.
மழை ஆற்றாமையைப்
பூமியிடம் பகிர்ந்துகொள்கிறது.
மரம் மண்ணிடம்,
வானம் மேகத்துடன்
செடிகள் காற்றுடன்
கண்கள் கனவுகளுடன்
பாதங்கள் பாதைகளோடு
எண்ணங்கள் கற்பனைகளுடன்
பேனாக்கள் பேப்பர்களுடன்
மருதாணித் துகள்கள் நகங்களுடன்
கடல் கரையுடன்
ஆறு அணையுடன்
பூக்கள் சுகந்தத்துடன்
கட்டங்கள் அஸ்திவாரங்களுடன்
உணர்வுகள் உறவுகளுடன்
மனிதர்கள் சிநேகிதர்களுடன்
ப்ரவாகிக்கும் வெள்ளத்துக்கு
வடிகால் அவசியம்
ஆக்ரோஷமாய்க் கொட்டவோ
அமைதியின்றி உருளவோ
அன்பை வர்ஷிக்கவோ
வடிகால்கள் தேவை.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
5 கருத்துகள்:
வடிகாலுக்குத்தான் அப்போ பழைய டைரி இப்போ முக நூல்---
சரஸ்வதிராசேந்திரன்
உண்மை சரஸ் மேம் :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அருமை.... உண்மை....
நன்றி டிடி சகோ
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))