எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 4 ஜூலை, 2015

நிகழ்காலத்தை நேசிக்கிறது.



நிகழ்காலத்தை நேசிக்கிறது.

மனச்சிப்பி புதைத்துவைத்த
மழைத்துளி என்று
நீலமுத்தாய் மாறியது

விரிந்தும் விரியாமலும்
புரிந்தும் புரியாமலும்
நெருங்கியும் நெருங்காமலும்
தூரத்துப் பச்சையின்
உண்மையை அறிந்தும்
தூரமாய் நின்று
ரசிக்கும் ஆனந்தம்.

இது நிகழ்காலத்தை நேசிக்கிறது.

நாள் கழியும்
வயல் மஞ்சள் பூசும்.
நரைத்துப் பஞ்சான
தலைமுடியாய்ப் படியும்.
பிறகு மொட்டைபோடும்.

பூமி தன் காய்ந்த உதடுகளைக்
காற்று நாவால் தடவிக்கொள்ளும்.

இதற்கு நம்பிக்கை இருக்கின்றது.
எதிர்காலத்தில்
நிகழ்காலத்தை நேசிப்பதால்.

இன்னும் சிறிதுநாளில்
பசுமை பொங்கும்
சிறுவனின் மகிழ்ச்சியாய்

எங்கோ ஒரு மணி
மௌனமாய் ஒலியைத்
ததும்பிச் சிந்தும்.

-- 85 ஆம் வருட டைரி

4 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நம்பிக்கை வரிகள் சகோதரி...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பூமி தன் காய்ந்த உதடுகளைக்
காற்று நாவால் தடவிக்கொள்ளும்.

இதற்கு நம்பிக்கை இருக்கின்றது.
எதிர்காலத்தில்
நிகழ்காலத்தை நேசிப்பதால்.

இன்னும் சிறிதுநாளில்
பசுமை பொங்கும்// அருமை அருமை...

இப்படி நடந்து விட்டால்...ஆஹா! சொர்கம்தான்...வரிகள் அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...