சாயங்கால நேரம்
குப்பையும் நானும்
வாக் போனோம்.
குப்பையின் கழுத்தைக்
கையில் பிடித்துக்கொண்டேன்.
நாக்குப் புழு
வார்த்தை மண்ணில்
ஊர்ந்தது.
செம்மண் தார்
அப்பின சிம்பிள் ரோடு
தந்திக் கம்பங்கள்
தூரம் காக்கும்.
அகங்காரமும் அடக்கமும்
உடுத்திக்கொண்டது
நானும் குப்பையும்
காற்று சுவாசிக்க
பயப்படும்.
மரங்கள் சுள்ளியில்
சருகு சேமிக்கும்.
சாம்பல் அப்ப
வானம் அவசரிக்கும்.
தூரத்துத் தூக்கணாங்குருவி
பார்க்கக் காற்று விழுந்தடிக்க
குப்பையும் பின் ஓடும்
என் கழுத்தைப் பிடித்துக்கொண்டு.
இடம் மாறி உடுத்தது
குப்பையும் நானும்.
டிஸ்கி :- 84 ஆம் வருட டைரி.
டிஸ்கி :- 84 ஆம் வருட டைரி.
2 கருத்துகள்:
வித்தியாசமான வரிகள் சகோ...
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))