எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

மமகாரம்.:-



மமகாரம்.:-

செங்கற்கள்
பிகு செய்து வண்டியேறும்.

வண்டிக்காரனை முட்டிக்
கேலி செய்யும்

மல்லாக்கப் படுத்து
வானம் உதைக்கும்.

பூமியில் வேரூன்றி
பூமி மறக்கும்.

வண்டியைக்
கிடுகிடுக்க வைக்கும்

தென்னைகளையும்
வாய்க்காலையும்
அரைக்கண்மூடலால்
உதட்டு வளைவில்
அலட்சியப்படுத்தும்.

வண்டி ஓலமிடும்
வண்டி செங்கலின் பாரத்துடன்
அதனின் இன்னொரு பாரமும்
சுமக்கமுடியாமல் தடுமாறும்.

முறிந்து விழும் அச்சாணியோடு
இடைந்து விழும் வண்டியோடு
செங்கல்லும் இன்னொன்றும் பிரிந்து
தூள்தூளாய்ப் போகும்.


-- 1985 ஆம் வருட டைரி

3 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எல்லாமே நாசமாப் போச்சே...!

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் தனபாலன் சகோ

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...