பூவின் வேதனை ( அ) மமதை:-
நான்கு சுவர்களுக்குள்
அமுங்கி அமுங்கி
நானும் நடுத்தூணாய்ப் போனேன்.
இந்தச் செடியில்
பூத்த மலர்களெல்லாம்
பறிக்கப்பட்டுவிட்டன.
தோட்டக்காரன்
கண்ணில் படாத
கீழ்க்கிளையில் நான்
மண்ணுக்கு நெருக்கமாய்
தண்டுக்குப் பக்கத்தில்
உதடு கிழிந்து
பனி வழிய நிற்கும் நான்.
கிளை மனமிரங்கி உதறவும்
விழப் ப்ரியமில்லாமல்
குரங்குப் பிடியாய்க்
கடித்துக்கொண்டிருக்கும் நான்.
ஒருநாள் தோட்டக்காரன்
வந்தான்
செடி பிரித்துக் கிளை வகிர்ந்து
நான் தேடினான்.
கீழ்க்கிளையில்
தண்டுக்குப் பக்கத்தில்
மண்ணுக்கருகில்
தோல் சுருங்கி
கிளையைக் கவ்வி
(என்னின் நான் )
ஒரு குச்சி நின்றிருந்தது.
டிஸ்கி :- 85 ஆம் வருட டைரி.
டிஸ்கி :- 85 ஆம் வருட டைரி.
3 கருத்துகள்:
அருமை சகோ நல்லவரிகள்.
// என்னின் நான் // அருமை...
நன்றி கில்லர்ஜி சகோ
நன்றி தனபாலன் சகோ
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))