நண்பனே
மலர்கள் மென்மையானவை.
எடுப்பார் கைப்பிள்ளைகள்.
எடுப்பார் கைப்பிள்ளைகள்.
அவைகள் பாஞ்சாலிகளாகப்
பிறக்கவில்லை.
அது நேர்ந்துவிட்டது.
செருப்பின் கீழ்
புல் நசுக்காதே
விடியலின் பனி வெப்பத்தில்
ஜனித்த அது
மாலைக்குள் பொசுங்கிப் போகும்.
வா.. !
நாம் மாநாடு போட்டு
கூட்டம் கூட்டமாய்ப் பேசாமல்
நிறைவேறாத் தீர்மானங்கள்
அரங்கேற்றிவிட்டு வராமல்
தாக்கல்கள் ஏற்றுக்கொள்ளப்படாமைக்கு
இரங்கற்கூட்டம் போடாமல்
மலர்களின் மிருதுத்தனத்தைப்
பனி வெப்பத்தை கனவுப் பொங்கலை
இரசிப்போம். !
வா !
ஸ்நேகிதம் சரிப்போம்
ஸ்பரிசிப்போம். !
டிஸ்கி :- 1883 ஆம் வருட டைரி.
2 கருத்துகள்:
நன்றி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))