கோபம்.:-
மனக்குதிரை
அவசரமாய்ப் பிடரி வளர்க்கும்
கோரைப்பல்லையும்
தொளை பெருத்த மூக்கையும்
குரோதக் கண்களையும்
மாட்டும்.
சேணம் உதறி
முன்கால் மடக்கி
பிடறி சிலிரித்துப்
பறக்கும்.
கையில் வேலும் சூலமும்
ஏந்தி
இடமும் வலமும்
சிதைத்துப் போடும்.
வழியில் நெருப்புச் செங்கல்கள்
சுவர் அமைக்கும்.
குதிரை புதிதாய்
சிறகு ஒட்டிக்கொள்ளும்.
நெருப்பூதி உயரத் தாண்டும்.
வாலை விசிறி அடித்து
முகத்தில் லத்தி பூசித்
திரும்பாமல் போகும்
கோரையில் தாவி
ஆக்ரோஷக் காலுடுத்துத்
தன்னையும் கத்தியால்
சிதற்றிக்கொண்டு
நிழல் தேடி ஓடி
வலுவிழந்து படுக்கும்.
தொளைபெருத்த மூக்கால்
பெருமூச்சும் சிறுமூச்சும் விடும்.
துரியோதனர்கள் கட்டிய
அரக்கு மாளிகை அழியும்போது
இந்தப் பாண்டவர்கள்
தப்ப முடியாமற் போனது.
டிஸ்கி :- 1985 ஆம் வருட டைரி.
டிஸ்கி :- 1985 ஆம் வருட டைரி.
3 கருத்துகள்:
உண்மை... அருமை...
நன்றி தனபாலன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))