எரிச்சல் 2.
இருட்டு
வெள்ளை உடைப்பிசாசுகளைக்
கண்டு பயந்து ஓடும்.
கைகள் கன்னம் அரிக்கக்
கன்னம் கை முறித்துப் போடும்.
ஆற்றுமணல் நீருறிஞ்சிப்
பொட்டல் வேஷமிடும்
மனப்புத்தகங்கள் ஏடுகிழித்து
எரிந்து போகும்.
அக்கினியை அவசரமாய்
விழுங்கும்
வெள்ளை அனுமான்கள்.
( மெழுகுவர்த்திகள் )
* * * *
பிரித்துவிட்ட
இடங்களிலெல்லாம்
இறுக்கமாய்ச் சுருக்கிக்கொள்ளும்
வெள்ளை முடிச்சுகள்.
கட்டிடங்கள்
மஞ்சள் வெளிச்சங்களில்
இருட்டு நடனமாடி
முட்டிக்கொள்ளும்.
கூட்டிலிருந்து
தவறி விழுந்த குருவி
பதைபதைக்கும்
சில மனசுத் தொப்பைகள்
விகாரங்கள் வெளிச்சிதறும்.
மெழுகுவர்த்திகள்
நெருப்பு வாயால்
கத்திக் கத்திக்
கறுப்பாய்ப் போகும்.
-- 1983 ஆம் வருட டைரியிலிருந்து.
-- 1983 ஆம் வருட டைரியிலிருந்து.
3 கருத்துகள்:
யம்மாடி...! இன்னும் இருக்கா...?
சரி ஆயிடுச்சு சகோ. இது கல்லூரி டைரி :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))