எனது நூல்கள்

எனது நூல்கள்
எனது நூல்கள்

வியாழன், 5 செப்டம்பர், 2013

உலகத்தின் அண்ணன்.

போருக்குப்பின் போர்
அமைதிக்குப் பின் அமைதியின்மை
சிலது தெறிக்கத் தெறிக்கக் கழலும்.
சிலது கழண்டபின்னும் சுழலும்.
திரவத் தங்கம்
அமைதி ஆசான்
மரபணு விதைகள்
பஞ்சத்துக்கு உதவி
ஏதோ ஒரு காரணம்
ஏதோ ஒரு முகமூடி
இன்னொன்றை ஆக்கிரமித்து
ஏகாதிபத்தியம் செய்ய..
எத்தனை முகமூடி
எப்படிக் கழட்டினாலும்
உண்மை முகம் தனக்கே தெரிவதில்லை
உலகத்தின் அண்ணனுக்கு.

3 கருத்துகள்:

சாய்ரோஸ் சொன்னது…

உலகத்தின் அண்ணனில்லை... பெரியண்ணன்!

முகமூடிக்கு பின்னிருக்கும் காரணங்களில் முகமூடியை தோலுரித்திருக்கிறீர்கள்... சிறப்பு.

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் சாய்ரோஸ். நன்றி :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...