எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 26 செப்டம்பர், 2013

நிர்மலம்.

அடித்துப் பொழியும் மழை
அழித்துச் செல்கிறது
அனைத்தையும்.
நிர்மலமான வானத்தின்கீழ்
அழுக்கற்று நிற்கிறது பூமி.
குளிர்கவிதை எழுதிச்செல்கிறது
தத்திச் செல்லும் காற்று.
கதகதப்பாய்க் கசிகிறது
வெட்க அணைப்போடு சூரியன்.
முத்தமிடப் பால் வழியும் வாயோடு
ஓடி வருகிறது நிலா.
நினைவும் மறதியுமாய்
மெய்மறந்து நிற்கிறது சந்தியாகாலம்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்னவொரு ரசனை...

சாய்ரோஸ் சொன்னது…

பொழுது சாயும்காலத்தை சந்தியாகாலமாக வர்ணித்து எழுதியிருப்பது மிக அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன்

நன்றி சாய்ரோஸ்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...