வெளிச்ச நீர்தெளித்து
மரக்கிளை வழி புள்ளி வைத்து
மஞ்சள் தடவி
செங்கோலமிடும் சூரியத் தாய்.
நீலவிதானத்தின் கீழ்
மேகப் பந்தலில்
பச்சையங்களைச்
சமைத்துப் பரிமாறும்.
மாலைக் குளியலிட்டு
மஞ்சள் வண்ணமாக்கும்.
உதிரும் இலைகளைத் தினம்
தொடுவானத்திலிருந்து தட்டிவிடும்
உழைத்த களைப்படைங்க
மலைத்தலை கோதி
கொண்டை முடித்துத்
நிலவப்பம் ஊட்டித் தாலாட்டி
இரவுப் பாய் விரித்துச் செல்லும்.
7 கருத்துகள்:
என்ன ஒரு வர்ணனை...!
வாழ்த்துக்கள் சகோதரி...
நீலவிதானத்தின் கீழ்
மேகப் பந்தலில்
பச்சையங்களைச்
சமைத்துப் பரிமாறும்.
- Vitamin D kodukkum. Thanner ullavarai passaithaan.
- Mazhai kkum ivare karanakartha.
Arumai.
மரக்கிளை வழி புள்ளிவைத்து கோலமிடும் சூரியக் கதிர் ......
தாயாகி அழகிய கவிதையாக நிறைகிறாள்.
நன்றி தனபால்
நன்றி மணவாளன்
நன்றி மாதேவி.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.
நன்றி ஆசியா. :)
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))