எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 பிப்ரவரி, 2013

”கண்ணா”மூச்சி.

கண்ணா மூச்சி.
*********************
 
தூணிலும் இருப்பாய்
துரும்பிலும் இருப்பாய்..
எங்கேயடா இருக்கிறாய்

இதயத்திலிருந்து எட்டிப் பார்க்கிறாய்..
ஒளியக் கிடைத்த இடமா அது..
குறும்பா..குறும்பா..!!!

பிரயாணப்பொழுதில்
பின்னோக்கி வழியே
தவிப்போடு நீ பார்க்க

ஒரு பார்வைக்கும்
அடுத்த பார்வைக்கும் இடையே
பின்னோக்கியில் ஊஞ்சலாடி நான்..

வேகத்தடையில்
மோதி விடக்கூடாது
என்ற கண்ணியத்தோடு நீயும்

எதிர்பாராமல்
மோதி விடுவோமோ என
எதிர்பார்ப்போடு நானும்

எத்தனை மிட்டாய் தின்றோம்
எத்தனை மீதி வைத்தோம்
என்ற கணக்கெடுப்பில்லாமல்..
கண்ணாமூச்சியில்..

திகட்டவேயில்லை..
திரும்ப உண்ண சொல்கிறது..
தித்திப்பு குறையாமல்..

3 கருத்துகள்:

கவியாழி சொன்னது…


திகட்டவேயில்லை..
திரும்ப உண்ண சொல்கிறது.. //
அருமை கொஞ்சம் பாதையில் செல்கையில் ஜாக்கிரதையாய் இருங்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கவியாழி கண்ணதாசன்.. :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...