எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 ஜூன், 2016

புன்னகைப் பூக்கள். :_



புன்னகைப் பூக்கள். :-

நான் மேற்கொண்ட இந்த
மௌனத்தவத்தை
உன் புன்னகைப் பூவை
அர்ச்சித்து முறியடிக்க
முடியுமா ?
மணமேடை அமர்ந்திருக்கும்
புதுப்பெண்ணின் தலைபோல்
உன் உதடுகளில்
மென்னகை மெல்ல நிமிரவேண்டும்.
முக்காட்டை விலக்கி
எட்டிப் பார்க்கும்
நிலவு முகம்போல்
உன் புன்னகை என்னை
எட்டிப் பார்க்க வேண்டும்.
மாலை நேரத்து இளந்தென்றலில்
மெல்ல மெல்ல மொட்டவிழ்ந்து
கட்டவிழும் முல்லைப் பூப்போல
உன் புன்னகைப் பூ
பூத்துக் குலுங்க வேண்டும்.
பிறைச்சந்திரன் போல்
இதழ்விரிக்கும்
சிரிப்புப்பூ
சத்தமில்லாமல்
உதடுகளில் மெல்ல
உறைய வேண்டும்.
மெதுவாக
இதழ்பிரித்து
மௌனமாய்
உதடுகளுக்குள்ளே
குறும்பாய்ச்
சிரிக்க வேண்டும்.
புன்னகை என்னும் புதுவண்ணச் சிட்
மெதுவாகப் பறந்து வந்து
இதமாக உன் இதழ்களில்
அமரும் வேளை எப்போதோ
அப்போதுதான் என்
மௌனத் தவத்தின் முடிவும்.

-- 85 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...