எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 ஜூன், 2016

மரத்தாயும் இலைக்குழந்தைகளும், மழையும்.



அவள் துளித்துளியாய்  இரசித்துக் கொண்டிருந்தாள். வானத்திலிருந்து தோரணம் கட்டுவது போல் நீர் கைகோர்த்து விழுவது அதிசயமாயிருந்தது. மழை பெய்து முடிந்த பின்பு காற்றசைவில் மர இலைகள் தெறிக்கும் பன்னீர்த்துளிகள் இன்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.


வானம் அழுக்குமூட்டைகளைச் சுமந்து
நொந்துபோன ஒரு கருப்பு இராத்திரியில்
மரமங்கைகள் தலைக்குக் குளித்தார்கள்.
அளவுக்கு மீறித் தண்ணீரில் தலையலசியதால்
கோந்துச் சளிப் பிடித்துக் கொண்டது.
தலைமுடியில் தங்கியிருந்த
சீயக்காயையும் தண்ணீரையும்
தட்டிவிட்டுக் கொண்டு
விடியற்காலை இருளில்
ஹேர்ட்ரையரைத் தேடிக் கொண்டிருக்கின்றனவா.

மழைக்காலப் பச்சைத் தளிர்களைப் போல
மனதிலும் ஒரு புதுத் தளிர்ப்பு.
மேல் இதழின் பனிவியர்வையில்
குளிரினை ரசிக்கும் ஸ்நேகப் பிஞ்சு.

மரத்தாயிடம் கெஞ்சிக் கூத்தாடியாவது
மழையில் தலைக்குக் குளித்து விளையாடும்
குறும்பு இலைக்குழந்தைகளைக்
காணக்காண பொறாமையாக வந்தது.
ஆத்மாவையே தொட்டுத் தழுவிச்
சிலிர்ப்பேர்ப்படுத்தும் மழை மனதுக்குள்
மகிழ்ச்சிப்பூக்களைப் பூக்க வைத்தது.

-- 83 ஆம் வுடைரி

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...