முகராசி:-
சில முகராசிகள்
தேவைப்படுகின்றன.
வெண்ணெய் திருடித் தின்ற
கண்ணனின் வண்ணமாய்.
பொய் சொல்ல மட்டுமல்ல.
உண்மையை மறைப்பதற்கும்.
அடேயப்பா.! நீ ஒரு
தேர்ந்த நடிகைதான்.
எப்படித்தான் உன்னால்
நொடிக்குள் மாற முடிகிறதோ ?
உன்னை நம்புகிறவர்கள்
இருக்கும்வரை
நீயும் ஏமாற்றிக்கொண்டேதானே
இருப்பாய்.
உன் முகராசியில் மயங்கித்தானே
என் முகத்தில் வரிகள் ஏற்பட்டன.
மறக்கமுடியுமா.
மறப்பதற்கு நீ என்ன
என் முகத்தில் மட்டுமா எழுதினாய்
நினைவுகளின் உச்சியிலல்லவா
வெற்றிச் சிகரம் நாட்டியிருக்கிறாய்.
எவரெஸ்டின் உச்சியில்
தேசியக் கொடியைப் போல.
என் மனக்கை
நினைவுப் புத்தகத்தில்
இதழ்களைப் புரட்டும்.
ஒவ்வொரு நேரத்தின் உச்சத்திலும்
உன்னைத் தரிசித்துத்தானே
மீளவேண்டியிருக்கிறது.
நைந்துபோன புத்தகத்திலிருந்து
நழுவி விழும் ஒற்றைத்தாளாட்டம்
உன் நினைவு நழுவும்போது
பிடித்து இறுக்கி முடிந்து கொள்கிறேன்.
மறுபடியும்
மறுபடியும்
முகராசியோ..?
-- 82 ஆம் வருட டைரி.
-- 82 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))