எப்போது விடியல். ( வருவாய் )
வாடிய வதனமொன்று
வசந்தம் வருகுமின்னு
வள்ளிக் கொடி அசையுமின்னு
வழிமேல் விழிபதித்து
விழியினிலே பூ பூத்து நீ
வரும் வழியில் வரவேற்கும்.
நீ இட்ட அடி நோகுமின்னு
இதயம் உன் காலடிக்குச் சென்று
இதத்தோடு அழைத்துவரும்.
பட்டுக்கால் வலிக்குமின்னு
பட்டுத் துணி விரிச்சு வச்சேன்.
சின்னக்கால் நோகுமின்னு
சீலைத்துணி விரிச்சு வச்சேன்.
மென்மையடி வருந்துமின்னு
மெத்தயத்தான் போட்டுவச்சேன்.
8 8
வெள்ளிக் கொடியிலே
வைரப் பூப்பூத்துத்
தங்கயிலை துளிர்த்ததுபோல்
அன்ன நடை நடந்து
அழகாய் நீ வருவாய்.
8 8 8
அடி !
அதிராமல் நடந்திடடி !
சின்னயிடை ஒடிந்து போகும். !
மெல்ல நடந்திடடி !
மொட்டுக்கள் உதிர்ந்து போகும். !
பைய நடந்திடடி !
மொட்டுக்கள் உதிர்ந்து போகும். !
பைய நடந்திடடி !
பாதமலர் செவந்துபோகும்.
8 8 8
மருண்ட மான் விழியோ
மையிட்ட மயில் விழியோ
சின்னச் சிமிழ் மூக்கோ ?
அன்ன நடையழகோ ?
பவள இதழ்க் கடையோரம்
தவழும் மென்னகையோ ?
சின்ன இடையழகோ ?
சிருங்காரக் கொடிபோலே
வாழைத்தண்டுக் காலழகோ ?
பாளை வெடித்த சிரிப்பழகோ ?
மலர்ந்த வதனமொன்று
வசந்தம் வருகுமின்னு
வள்ளிக்கொடி அசையுமின்னு
வழிமேல் விழிபதித்து
விழியினிலே பூப்பூத்து
என்னருமை வசந்தியே !
நீ வரும்வழியில் வரவுகண்டு
வரவேற்கும்.
-- 82 ஆம் வருட டைரி.
2 கருத்துகள்:
அருமை! அருமை!
நன்றி பானுமதி !
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))