மனிதர்கள்
மனிதர்கள்.
பட்டறையின்
அண்டாக்களாய்
சுத்தியல்
அடி தின்று
காற்றுக்கு
ஒலிஅடி கொடுக்கும்
பட்டறையின்
அண்டாக்களாய்
தானும்
பிழிபட்டு
தானும்
கிழிபட்டு
தண்ணீரையும்
பாழாக்கும் துணிகளாய்
நமத்துக்
கிழிபடும் சாக்காய்
ஒளிச்சகதியில்
விண்கற்களாய்
சூரியப்பயிருக்குள்
களைத் தாவரங்களாய்
சேணம்மாட்டிய
க்ரகக் குதிரைகளாய்
ஒரே
கூண்டில் உழன்று திரியும்
சிறைப்பறவைகள்.
--1986 ஆம் வருட டைரி.
--1986 ஆம் வருட டைரி.