எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 மே, 2013

குடியும் குடும்பமும்.

முட்டாள் அன்னங்கள்
ஒதுக்கப்படுகின்றன..
பாலை சுத்திகரித்துப்
பதநீராக்குகின்றன.
சுண்ணம் தடவாத
பானைப் பாலுக்குள்
சுண்ணாம்பாய் வேகிறது
கணவனின் குடலுடன்
மனைவியின் இதயம்.
தாய்தந்தை ஊடலில்
விசிறி விசிறி
வேக்காளமாகிறது
குழந்தையின் மனம்.
கோட் ஸ்டாண்டில்
தொங்கும் சட்டையைத்
துழாவித் துழாவி
வீட்டுள் நுழைந்ததும்
தன்னை வருடும்
தந்தையின் கை தேடும்
குழந்தையின் கண்கசியும்
யாரும் அறியாமல்
வடிக்கும் கண்ணீரில்
கரைந்து வெளியேறுவான்
தந்தையைத் தின்ற
கோரக் குடியரக்கன்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்றைக்கு பலரையும் அடிமையாக்கி விட்டான் அரக்கன்...

/// கணவனின் குடலுடன்
மனைவியின் இதயம். ///

Thenammai Lakshmanan சொன்னது…

ஹ்ம்ம் ஆம் தனபாலன் சார்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...