மனிதர்களைத் தேடி..
பொழுதின் கழுத்து
என் கைகளில்
காற்று
பலூன்களாய்,
நீர்க்குமிழிகளாய்
உருமாற்றம் பெறும்.
வாணச் சத்தங்கள்
மனசுக்குள்.
வடமெனும்
உயிர் இல்லாச்
சவமாய்த் தேர்.
வெய்யில் குல்லாய்க்குள்
தேராய்
மனம்.
தெய்வம்
மனிதர்களைத் தேடி
திருவிழாக் கூட்டத்துள்..
31.12.1986 -- 6.10 PM.. வீட்டு டைரியில் கிறுக்கியது.
2 கருத்துகள்:
மனிதர்கள் கிடைப்பது அரிது...
நன்றி தனபால்.. ஆம்..
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))