எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 நவம்பர், 2011

மேகப் பசு..

மழை மரங்கள்
வெளியில் மின்னல்சரம் எறிய..
மனமும் சூல் கழட்டி
மகரந்தம் கோர்த்தது.

டெரஸ் பாலைகளில்
மழை விதையூன்றி பாத்தி கட்டும்.
மாடியோர விளிம்புகளில்
ஊஞ்சலாடும்.

சபைக்கவிஞர்களாய்
சிம்மாசனமிட்டு அமர்ந்து
ப்ரிய ராகங்களால்
உரக்கப் பாடும்.

காதருகே
இடிக்கொம்பசைத்து
மேகப்பசு
மழைப்பால் கறக்கும்.

செடிகள் புதிது புதிதாய்ப்
நீர்ப்பூவுதிர்க்கும்.
கை பாய வரும் குழந்தையாய்
ஜன்னல் வழி கலகலக்கும்.

சித்திரையில் பரிசமிட்டு
ஐப்பசியில் மண்மணக்கும்.
காற்றோடு கலந்து
மனமகரந்தங்கள் சூல் மூடும்.

மழைப்பால் குடித்த
தாவரங்கள் பால் வழிய
வேர்வரைக்கும்
நனைந்து நிற்கும்

3 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

மழைப்பால் குடித்த| தாவரங்கள் பால் வழிய| வேர்வரைக்கும்| நனைந்து நிற்கும்!

-மொத்தக் கவிதையையும் மனதைத் தொட, இந்த வரிகளோ சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டன. புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. நான் உணர்ந்தது அப்படி. பிரமாதம்.

Chanakyan சொன்னது…

my god, What is this? I don't understand why such a talent should remain confined to blogs. Why? You are not interested in media glare or self-impose exile? Please keep writing more, for us --- Mazhai Rasigan

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்

நன்றி சாணக்யன்..

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...