19. 6.85.
அன்பிற்கினிய
மதூ,
நலம். நலமறிந்த
மகிழ்வு. நாளும் நலங்களே விளையட்டும். !
முகமறியா நட்பாய்
முகிழ்த்து, வேர்க்கால் பரப்பிய ஸ்நேகக் கைகுலுக்கலில் குடும்ப உறவுகளையும் அறிமுகப்படுத்தியமைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றி தோழீ !.
வண்ணப் பூக்களோடும்,
பிஞ்சு மழலைகளோடும் எனக்கும் நிறைய பரிச்சயமுண்டு – உன்னைப் போல் !. என் வீட்டில் குடியிருக்கும்
ஆசிரியர் ஒருவரின் சின்னப் பெண் அருணா – ஒன்றரை வயது – அவளோடுதான் என் பொழுதுபோக்கு.
செல்லமாய் ’ஜிக்கு’.
முத்தக்காவை
நான் கேட்டதாகச் சொல்லேன் ! அவர்கள் என்ன டிகிரி முடித்துவிட்டு வீட்டிலுள்ளார்களா
? அவர்களின் திருமணம் எப்போது ? இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ? ( வற்றல்
மிளகாய் காய வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ) வீடு முழுக்க பிள்ளைகள் மயமாய் வீற்றிருப்பாய்.
காலப் பறவையும் கடிதே சிறகை அசைத்துப் போகும். !
டைப் ரைட்டிங்
ஹையர் எக்ஸாம் எழுதப் போகிறாய். தம்பிகளிருவரும் லோயரா ? இன்ஸ்டிட்யூட் பேர் என்ன
? இன்ஸ்ட்ரக்டர் எப்படி ? நன்றாக டீச் பண்ணுகிறார்களா ? அன்றி நீ டீஸ் செய்கிறாயா
?
ஹிந்தி வகுப்பு
எப்போதிருந்து ஆரம்பம் ? வீணை கத்துக்க வேண்டியதுதானே ? நான் கூட வயலின் கத்துக்கலாமென்று
யோசிப்பில் ! ஆனால் டைம்தான் போதமாட்டேங்குது. ஷார்ட் ஹேண்ட் க்ளாஸ், எம் ஏ ந்னு நேரம்
அதுக்கே சரியா போறது.
உனக்கென்னப்பா
! ஜாலியா வீட்ல உட்கார்ந்து புஸ்தகத்தைப் புரட்டியபடி, கவிதை எழுதிட்டு, ஃப்ரெண்ட்ஸுக்கு
எல்லாம் லெட்டர் போட்டுட்டு, ஃப்ரீயா இருப்பே ! பொழுது போக்குறதுக்கு குட்டிங்களும்
முத்துவைப் போன்ற ஸிஸ்டர்ஸும்.!
உனக்கு அக்டோபருக்குள்
மூன்று முடிச்சு என்று எழுதியிருந்தாயே ! மணாளன் யார் ? அதையேன் எழுதல. எனக்குத் தெரியப்படுத்தக்
கூடாது என்பதாலா ?
பர்த்டேக்காக
இன்று ட்ரெஸ் வாங்கினேன்.
ஃபாத்திமாவிலேயே
எம் ஏ தமிழ் பண்ணப் போறதா எழுதினேயே. ஏன் பண்ணல. கரஸ்பாண்டண்ட்ல எம் ஏ பண்ண உத்தேசமா
? அல்லது பி எல் அல்லது எனி அதர் பிஜி கோர்ஸ்
.
நிஜமாய் அரும்பின
எதுவுமே அழிவதில்லை. உருமாறிப் போனாலும் உண்மைகள் மாறுவதில்லை. ஸ்நேகமும் அப்படித்தான்.
வீட்டில் எல்லாரையும்
கேட்டதாக விளம்பு.
கவிதைகள் படித்தேன்.
சுவைத்”தேன்”.
அற்புதம். மீதி
உன் லெட்டர் பார்த்து.
என்றென்றும்
அன்புடன் மனோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))