எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 நவம்பர், 2018

ராணித் தேனீ.

அவள் ராணியாயிருப்பது துயரமாயிருக்கிறது.
நாய்க்குட்டியாய்ப் பிரகடனப் படுத்தியபின்னும் அவள்
ராணித்தேனீபோல் நினைத்துக் கொள்கிறாள்.

கூடுகளைப் பத்திரப்படுத்தியபடி அலையும் அவளுக்கு
நீங்கள் வழங்கிய உணவைத்
தரையில் இருந்து எடுத்துத் தின்பது அசௌகர்யம்தான்

பிழியப் பிழியப் பல்சுவை தரும் அவள்
நீரை இன்னும் நக்கிக் குடிக்கப் பழகாதவள்.
அல்லதைத் தின்ன ஒவ்வாதவள்.

பசித்திருக்கும் அவளைச்
சாலையோர இலைச்சத்தங்கள்
சலனப்படுத்த வேண்டுமென்ற தாபம் புரிகிறது..

மூக்கின் நுனி ஈரமாக கன்னம் நனைக்கப்
பறந்துவரும் அவளை
பழக்கதோஷ நாயென்று நினைக்கலாம்.

கூடுகளை பிழியப்பட்ட அவளோ
இன்னொரு கூட்டைக் கட்டி ராணியானபின்னும்
நீங்கள் விரும்பியபடியே காட்சி தர விழைகிறாள். 
  

செவ்வாய், 27 நவம்பர், 2018

உன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. )

உன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. ) 

** உன் கடிதச் சேதியறிய
தெருமுனை வரை நீளும்-
என் விழிமுனைகள் ! –
தபால்காரனை எதிர்பார்த்து !

என்னைத் தாண்டிப்போகும்
கடிதம் சுமந்து
கிழட்டுச் சைக்கிள்
வெறுமையைத் தந்து !

மனசோடு சேர்ந்து
வாயிற்படியும்
மௌனமாய்ச் சிரிக்கும் !

** பழைய சைக்கிள்
பல்லிளித்து நிற்கும் ஒருநாள்
என் முன்னால்.

மனசு குளிர்ந்ததை
உதடுகள்
புன்னகையால் உச்சரிக்கும்.

சைக்கிளைப் போல்
வயசான தபால்காரன்
ஒரு கிறுக்கல் முகவரிக்கு
முகம் யாரெனக் கேட்பான்.

மனசின் சோகம்
கண்கள் காட்டும்.!

** இப்படியே நாட்கள் கழிய
எப்படியோ ஒருநாள்
உன்கடிதம் கைக்கு வரும் !

சுற்றுமுற்றும்
விழிகள் சுழலும்-
சுற்றம் யாருமில்லையென்று
மனசு மகிழும். !

** சத்தம் வராமல்
உறை கிழியும்
சமையற்கட்டின்
மூலையில் அமர்ந்த

என் கையில் !
  

திங்கள், 26 நவம்பர், 2018

கனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )

கனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )

பகல் வெளியில்
அகல் விளக்கேந்தி
மனிதனைத் தேடிய
அறிஞனைப் போல்
முழுநிலா முற்றத்தில்
புதியதொரு சமுதாயம்தனைத்
தேடுகிறார்கள் – புதியவர்கள் !.

காற்று கையசைக்க,
மலை முகட்டில்
தவழ்ந்துபோகும்
மேக ஊர்வலங்கள்.!

கற்பனை கட்டவிழ்க்க,
எண்ணங்களில் முகிழ்க்கும்
கனவுகளின் ஊர்வலங்கள் !

0     0    0    0

கனவுகள் :-

வானமும் பூமியும்
உரசிக் கொள்ளும்
தொடுவானமாய்,

நிழலும் நிஜமும்
தொட்டுக் கொள்ளும்

பொய்க் கோபம் !

0 0

காப்பியம் முதல்
திரைப்பட காதற்
காட்சி ஈறாய்
கனவுகளே முன் நிற்கும். !

கனவில் கண்டே
துணையினை அடைந்ததாய்
காப்பியம் சொல்லும். !

இன்றில் நிகழ்வில்
இதுவா செல்லும் ?

விழிகளில் மின்னல் வெட்டி,
மனசுக்குள்
மழை பொழிந்ததென்பார்.
மொழிகளெலாம்
செந்தமிழ் கவியென்பார் !

இதயத்துள்
கல்யாணக் கனவுகள் தெளிப்பார்.!

திருமணமெனில்
திசைமாறிப் போவார். !

கனவில் கண்டே
துணையினை அடைந்ததாய்
காப்பியம் சொல்லும் !

இன்றின் நிகழ்வில்
இதுவா செல்லும் !

0    0

மாங்கல்யம் ஏறுமென
மங்கலக் கனவுகளில்
எங்கள் தேசப் பெண்கள் !

ஆனால்..

குறைந்த விலைக்கு
எந்த மாப்பிள்ளையும் கிடைப்பதில்லை !

தேர்தல்களில்
சரித்திரங்களை மாற்றுகிற
இந்தத் தாய்க்குலங்களின்
சரித்திரத்தை மாற்றுவது யார் ?

நேசிக்கும் நெஞ்சினை
வாசிப்போம் –
வாழ்க்கை நம் கையில்!

0 0

திருவோட்டில் முட்டையேந்தி
பகற்கனவு கண்ட
பிச்சைக்காரனைப் போல்

வாங்கிய பட்டங்களைத்
தாங்கியபடி
வேலை தேடி ஊர்வலம் போகும்
இளைய தலைமுறையின்
ஊமைக் கனவுகள்!

உதவாத பட்டம் தர
ஊருக்கொரு கல்லூரி வேண்டாம்
ஆளுக்கொரு வேலை தர
ஆலைகளே பெருகிடல் வேண்டும். !

0 0

கேள்விக் குறியாய்
பிறை நிலவாய்
வயல் வெளியில்
வளைந்து நிற்கும்
மனிதர்கள் !

வெளிச்சக் கனவுகளை
விழிகளில் தேக்கிய
கறுப்பு உருவங்கள். !

விளைநெல்
நிலம் நோக்கித்
தலை சாய்க்கும். !

இவர்கள் நிலை கண்டு
தலை சாய்ந்த செங்கதிரும்
கண்ணீராய் மணி நெல்லை
மண் மடியில் சிந்தும். !

உடல் முழுதும்
வியர்வை முத்துச் சுமந்த
இவர்களின் கனவுகள் யாவும்
கானற் கனவுகள் !

0 0

செய்தித்தாள்களில்
எண்களைப் பார்க்கும் வரை
அவனுக்குள்
ஆயிரமாயிரம் கனவுகள். !

பரிசு இல்லையெனினும்
தினம் தினம்
அரும்பி அழிந்து
முளைத்துத் தழைத்துப்
பூக்கும் நம்பிக்கை !

0 0

வெற்றி இலக்கினை நோக்கி
வீறுநடை போடும்
போராளியின் இலட்சியக் கனவுகள் !

வாழ்க்கையை மறந்து
வாலிப வயதில்
ஆயுதமேந்திய இவர்களின்
கனவுகள் ஊர்வலம் போவது
தூக்கத்தில் அல்ல
துக்கத்தில் !

இந்தக் கனவுகள்
சுகமானவையல்ல
சுமையானவை.  !

0 0

நிலத்திலிருந்த அனுராதாவை
வான வெளியில்
நீந்த விட்ட
விந்தைக் கனவுகள் !

அம்மானைப் பாட்டியாயிருந்து
அம்புலியை
மனிதன் காலால்
எட்டி உதைத்தது –
விஞ்ஞான சாதனை !

0 0

நீள்வெளி வானமதை
வெளிப்பதாய்
கனவு காணும் வெண்ணிலா !

பாவம் :
தன் முகம் முழுதும்
இருள் கவிந்து
காணாமற் போகும் !

மீண்டும் வளர்ந்து
தேய்ந்து..
முடிவுறா
ஒரு வர்க்கப் போராட்டம். !

0 0

இனியோரே!

கனவுகள் காணக்கூட
கண்ணிமைகளை மூடாதீர் !

விழிகள் கூட
காணாமல் போகும்
விந்தை தேசமிது !

0 0

திடமான கனவுகள்
தீர்க்கமானவை
தீர்க்க தரிசனமானவை !

மோனக் கனவுகளில்
மூழ்கிக் கிடக்கும் சமூகத்தின்
விழிகளைத் திறப்போம். !

புதிய தலைமுறைக்கு
நற்பாதை சமைப்போம் !

ஞாலம் முழுதும்
நம்பிக்கை விதைகளை நடுவோம் !

கால வெள்ளத்தில்
காய்ந்த விதைகளும்
முளை விடும் !

விதை முளைகள்
வெடிக்கையில் –
பூமியும் காயம்படும் !

ஞாயிறு, 18 நவம்பர், 2018

The Quarry :-

The Quarry :-

The Quarry by W. H. Auden is a ballad. The Ballad is a mixture of beautiful traditional folk songs and modern literary touches. The reader is kept guessing until its climax and conclusion. The poem is in the form of a series of questions and replies.

The beginning of the poem is arresting in its abruptness. It is the lover who poses questions to which his ladylove answers. The situation is that the lover has been chased by a band of soldiers for unknown reasons and in order to escape from that the lover has taken shelter with his lady love.

As the poem begins, the lady hears the sound of drumming at a distance and becomes curious to know who the drummers are. The lover merely says that it is a group of soldiers. The subsequent stanzas clearly show that the group of soldiers have been moving towards a definite direction.

The soldiers come with their swords in the air shining brightly against sunshine. The lady asks the lover what the soldiers are doing and he replies that they are perhaps performing their morning routine. Suddenly the soldiers take a turn and the lover immediately kneels down. The lady asks the lover why the soldiers have reined their horses and who they wanted to see.  He thinks it is the person or the farmer. But the soldiers passes them all. It is here that the lover conveys her even as the soldiers break open the door to enter their house. The poem ends here and leaves the conclusion suggestive to the readers.


The poem Quarry by W. H. Auden made us very interesting from the beginning till the end. But at the end the poet W. H. Auden leaves that to the imagination of the readers. We assume that he would be caught up by the soldiers. 
  

வெள்ளி, 16 நவம்பர், 2018

The “Secret Of Works” by Vivekananda :-

The “Secret Of Works” by Vivekananda :-

Helping man spiritually is the best help than helping him physically. The next best help that can be rendered to man is intellectual help. Vivekananda asserts that ignorance is death, knowledge is life. The physical help can never bring permanent satisfaction. The highest type of help is that makes us strong spiritually.

Every work must necessarily be a mixture of good and evil: yet we are commanded to work incessantly. Work incessantly but not attached to it is the one central idea in Geetha. Mind is compared to a lake where ripples arise and disappear but it leaves a mark. Similarly every work that we do leaves an impression on our minds and some of the impressions determines what we are. This is what is called “Smaskara”. Everyman is impelled to do good or bad by these impressions. If the mind is full of good impressions, it will not allow the man to do evil.

Liberation means freedom from the bondage of good as well as evil. A golden chain is as much a chain as an iron one.

Love never comes until there is a freedom. You should work like a master and not like a slave. There is no true love possible in the slave. Real existence, real knowledge, and real love are eternally connected with one another, the three in one. The true love can never react so as to cause pain either to the lover or to the beloved. If lovers cannot get near enough, they feel pain. But if there is real love, this does not rest on physical attachment. Lovers may be a thousand miles away from each other, but their love does not die and will never produce any painful reaction.

All thought of obtaining returns for the work we do, hinders our spiritual progress: may in the end it brings misery. The selfless and unattached man may live in the very heart of a crowded and sinful city, yet he will not be touched by sin.


Karma yoga means readiness to act and help everyone without any thought of return. The true life of action is indeed harder than the equally true life of renunciation.
  

புதன், 14 நவம்பர், 2018

விளி.

கோப்பை புதிது
மதுவும் புதிது
இதழ்கள்தான் அரை நூற்றாண்டுக்கானவை.

உப்பும் எலுமிச்சையும்
உராய்ந்து ருசிகூட்ட
கலகலக்கிறது டகீலா.

புளித்த பார்லித்தண்ணீரோ
கெட்டுப்போன தேங்காய்த் தண்ணீரோ
பெருக்கெடுத்தோடுகிறது பீர்.

ஆப்பிளோடு நுரைக்கிறது வோட்கா
நுரைக்காத செந்நீராய் திராட்சைரசம்.
நொதித்து வடித்தெடுத்த ஸ்பிரிட்

விதம் விதமாய் உண்டிங்கு போதை
எதிர்பாரா சமயம் பாயும் உன் பார்வையும்
ஆதூரத்தோடு நீ விளிக்கும் என் பெயரும் போல்.
  

புதுப்பிக்க இயலாமல்..

திடீரென விழுந்த
வார்த்தை அணுகுண்டால்
நின்று போயிருக்கிறது
நமது உரையாடல்.

சிதறிக்கிடக்கின்றன
கட்டிடங்களைப் போல
நமது உள்ளங்கள்.

எடுக்கவும் கோர்க்கவும்
உடுக்கை இழந்தவன் கைபோல்
இல்லை இங்கொரு நட்பு.

புதைகுழியில் மணற்செறிந்த
உடலுடன் புதைந்துகிடக்கிறது
புதுப்பிக்க இயலாத உயிர்.
  

வெள்ளி, 2 நவம்பர், 2018

குகைக்குள் விரியும் காடு.

பரணின் செம்பழுப்பு அப்பிய
துருப்பிடித்த ட்ரெங்குப் பெட்டியின்
பழைய நோட்டுப்புத்தகங்களில்
சில நட்புகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
தூசி தட்டிப் படிக்கப்படிக்க
ரயில் குகைக்குள் விரியும் காடென
ஒரு பிரயாணப் பொழுதை
அவை சுவையாக்கி விடுகின்றன.
நீளும் பெட்டிகளாய்
ஒன்றன்பின் ஒன்றாய்
கைகோர்த்து ஓடிவந்தாலும்
வெவ்வேறு இடங்களில்
சில நின்று விடுகின்றன.
கூடவே வருபவற்றின் சுமையும்
சுகமும் பரிமாறிப் பரிமாறி
நைந்துபட்டாலும் சில
கல்வெட்டாய் உறைந்திருக்கின்றன. 

  
Related Posts Plugin for WordPress, Blogger...