புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

கானகம் தோறும்

தேடித் தேடிக் களைக்கின்றன
இருப்பை வாசிக்கும் குவளைகள்.
உறக்கத்தின் கோட்டை
ஒரு போதும் திறப்பதில்லை.
பிச்சியாக்குகின்றன
பித்தம்தீர்க்கும் அலரிப்பூக்கள்.
உன்மத்தம் அறியாமல்
ஊமையாய்க் கிடக்கின்றன
ஊமத்தைகள்.
தன்னுடலின் சுகந்தம் வீசுவது
தன்மனவெளி மட்டுமே..
உணர்ந்தும் உருத்தேடி
உருவற்றுச் சோர்கிறது
கானகம் தோறும்
ஒற்றைக் கஸ்தூரிமான்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...