எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 ஜனவரி, 2014

காற்றாய்..

அன்பின் வலி இன்னதென்று அறிந்திருக்கிறாயா.
எதனை எதனால் தொலைப்பதென்று
அறியாது காத்திருக்கிறது அந்த பீடம்.
ஒரு குழந்தை தவழும் மடியாய்
ஒரு பூ உதிரும் கிணற்றடியாய்
ஒரு குழந்தையாகவோ
ஒரு பூவாகவோ
தொட்டு விடமாட்டோமாவென்று.
ஏன் அந்தச் சிலந்தியிடம் மாட்டிய
அறியாப் பூச்சியாகக் கூட.

காத்திருப்பின் வலியை நீ உணர்ந்ததேயில்லை.
காற்றாய் நீளும் என் கரங்கள்
எங்கிருந்தோ வந்து உன்னைச் சுற்றி
சுற்றிச் சென்று விடுகிறது.
நுழைவதில்லை நான் உன் சுவாசத்தில்.
நீயாய் என்னை நினைத்து
ஆழப் பெருமூச்சு இழுக்கும்வரை
காத்திருக்கிறேன் நட்சத்திரங்களோடு
நட்சத்திரமாய்க் கலந்து..

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

காத்திருப்பின் வலி சுகம் தான் - அன்பானவர்களை எதிர்ப்பார்க்கும் போது...!

வாழ்த்துக்கள் சகோதரி...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நேரம் கிடைப்பின் - தங்களின் கருத்துரைக்காக : பருவம் தவறிய மழையின்மை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, பிளாஸ்டிக் பொருட்களின் அபரிமிதமான பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசு - இதனால்...

http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Third-World-War.html

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...