எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 16 ஜூலை, 2013

பத்துப் பாட்டு.


1.  சுத்தம்.:-
*************

சுத்தம் செய்தபின்னும்
விட்டுப் போன தூசி.
உன் வார்த்தைகள்.
********************************
2. பார்வைப் பூ.:-
**********************

ஆரிக்கிளும் வெண்ட்ரிக்கிளும்
இறகசைத்தன
பட்டாம் பூச்சியாய்..
உன் பார்வைப் பூவில்..
*********************************
3. கடவுள்.:-
*************

ஏகப்பட்ட கடவுள்கள்
குவியலாய் இருந்தார்கள்.
எனக்குப் பிடித்த கடவுள்
என்னைப்போல் எளிமையாயிருந்தார்.
*******************************************
4. குழந்தை:-
**************

அடுத்த வீட்டின் குழந்தைகள்
தோளணைத்துக் கிடந்தன
அவளுக்கான குழந்தை
உருவாகும் வரை
****************************************

5. மழை வலைக்குள்
குடையோடு சிலந்தி..
நீர்ப் பூச்சி
பிடித்துண்ணும்.

***************************************

6. அசைபோடுவது
கவ்விச் செல்வது
குடல் குதறுவது
சுற்றிலைய

கால்மடக்கி
வயிறெக்கி
இறகு படபடக்க
புதுத்தேனை உறிஞ்சும்
தேன்சிட்டை பூ விரும்பும்.

****************************************

7. பச்சையப் புள்ளியிட்டு
பூக்களால் இழையிழுத்து
பழக்கோலம் பூணும்
மரம்.

****************************************

8. விடியலின் நீர்ப்பூக்கள்
பூமியில்
பூக்கும் பனி.

****************************************
9. மௌனமாகவே கடந்து
சுருளச் செய்துவிடுகிறாய்
அடுத்த புயலுக்கு ஏன்
உன் பெயரிடக்கூடாது.

**********************************************************
10. எதிர்வீட்டுக் குழந்தை
அனுப்பிய முத்தப் புறாக்கள்
காற்றில் சப்தமிட்டு
கன்னத்தில் எச்சமிடுகின்றன..


4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களின் தளம் அறிமுகம் : http://jeevanathigal.blogspot.com/2013/07/14-to-20-07-2013.html

சாய்ரோஸ் சொன்னது…

எனது வாரத்தொகுப்பில் இந்தக்கவிதை 2ம் இடத்தை அலங்கரித்திருக்கின்றது... தொடர்ந்து இன்னும் பல அற்புத படைப்புகளைத்தர மனமார்ந்த வாழ்த்துக்கள்...(கவிதையை பற்றிய விமர்சனம் எனது தளத்தில்...)

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன்..

நன்றி சாய்ரோஸ். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...