தென்றல்கீற்று நிலாத்துண்டுகளை
முத்தமிட்டுச் சரசமாடிய
கிராமத்து இராக்காலங்கள்
ஒற்றைச் சுருள் முடிபோல்
நினைவுகளின் முன் உச்சியில்
நர்த்தனமாடியபோது
நினைத்துக் கொண்டாள்.,
“நகரத்துக் கட்டடச்
சாகசக்காரிகள்
சந்திரனை இப்படியா
முந்தானைக்குள்
பதுக்கிக் கொள்வது ..?” என்று.
4 கருத்துகள்:
ரசிக்க வைத்த வரிகள். நல்ல கவிதை. சந்திரன் ஆணா, பெண்ணா... நிலவு முகம் என்று பெண்ணுக்கும் ஒப்பிடுகிறார்கள். என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே, நீ இளையவளா மூத்தவளா என்று பாடலில் பெண்ணாகப் பாடுகிறார்கள். ஆனால் சந்திரன் ஆண், பல மனைவிகள் உண்டு என்று புராணங்கள் சொல்கின்றன. எது சரிக்கா... இது என் நீண்டநாள் சந்தேகம். விடை தெரிந்தால் சொல்லுங்கள்... நான் கற்றுக் கொள்கிறேன்...
புராணப்படி ஆண்.. நவீன கவிதைகளின்படி பெண்..:)) இதுதான் தெரியும் கணேஷ்..:)
நன்றி கணேஷ்..:)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
நினைவுகளின் முன் உச்சியில்
நர்த்தனமாடியபோது
நினைத்துக் கொண்டாள்.,
“நகரத்துக் கட்டடச்
சாகசக்காரிகள்
சந்திரனை இப்படியா
முந்தானைக்குள்
பதுக்கிக் கொள்வது ..?” என்று. - Nalla mudinthu kolvathai azhagaaka pathinthu ulleergal.
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))