எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 நவம்பர், 2018

உன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. )

உன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. ) 

** உன் கடிதச் சேதியறிய
தெருமுனை வரை நீளும்-
என் விழிமுனைகள் ! –
தபால்காரனை எதிர்பார்த்து !

என்னைத் தாண்டிப்போகும்
கடிதம் சுமந்து
கிழட்டுச் சைக்கிள்
வெறுமையைத் தந்து !

மனசோடு சேர்ந்து
வாயிற்படியும்
மௌனமாய்ச் சிரிக்கும் !

** பழைய சைக்கிள்
பல்லிளித்து நிற்கும் ஒருநாள்
என் முன்னால்.

மனசு குளிர்ந்ததை
உதடுகள்
புன்னகையால் உச்சரிக்கும்.

சைக்கிளைப் போல்
வயசான தபால்காரன்
ஒரு கிறுக்கல் முகவரிக்கு
முகம் யாரெனக் கேட்பான்.

மனசின் சோகம்
கண்கள் காட்டும்.!

** இப்படியே நாட்கள் கழிய
எப்படியோ ஒருநாள்
உன்கடிதம் கைக்கு வரும் !

சுற்றுமுற்றும்
விழிகள் சுழலும்-
சுற்றம் யாருமில்லையென்று
மனசு மகிழும். !

** சத்தம் வராமல்
உறை கிழியும்
சமையற்கட்டின்
மூலையில் அமர்ந்த

என் கையில் !
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...