புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

திங்கள், 15 பிப்ரவரி, 2016

ராட்சச தெய்வம்

தேவதை தெய்வம்
முயல்குட்டி கோழிக்குஞ்சு
பூம்பாவை தேன்சோலையவள்

தேவன் சாமி
கந்தர்வன் காதலன்
அன்பன் கருணைக்காரனவன்

அவள்
யட்சிணியாகும்போது யட்சனாக
காளியாகும்போது கருப்பனாக,
பூதமாகும்போது பேய்பிசாசாக
வேட்டைக்காளியாகும்போது சுடலைமாடனாக
முருதாடியாகும்போது ராட்சசனாக
ரூபம் எடுக்கிறான் அவனும்.

ராட்சசம் ஆடிப் போரிட்டுமுடிந்து
சாந்தமாகும் இருவரிடத்தும்
அதே ராட்சச வேகத்தில்
தெய்வமும் புகுந்துகொள்கிறது

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...