ப்ரிய
அமலிக்கு :-
இது
நேரங்கடந்த
வாழ்த்துத்தான்.
இந்த
வாழ்த்துப் பறவை
இனிப்பை
சுமந்து வருகின்றது
உனக்காக.
இது
இதயம்
இதயத்திற்கு அனுப்பும்
அன்புத்
தபால்
மரம்
மண்ணுக்குச்
சூடும் பூச்சரம்
இது
மழைக்கால
இரவில்
ஓரத்தில்
உனக்காய்த்
தகிக்கும்
கணப்பு
இது
அடர்ந்த
செறிவாய்
எனக்குள்
தெறிக்கும்
உனக்கான
ப்ரிய வாழ்த்து.
இந்த
நேசம்
வேஷம்
போட்டுக் கொண்டதல்ல.
சுவாசத்துள்
நிரம்பிக் கொண்டது.
இந்த
நேசம் வாசனைப் பூக்களாய்
என்றென்றும்
உன்னைச் சூழ்ந்து
சூழ்ந்து
நிற்கும்.
பனி
நாளில்
வெய்யில்
காலங்களில்
வீட்டின்
இருட்டோரங்களில்
மௌனம்
அடர்த்தியாய்ப்
போர்த்தி
இருக்கும்போது
என்னைப்
பற்றிச் சிந்திக்க
உனக்கு
அவகாசம் கிடைக்குமென்று
நம்புகின்றேன்
இந்த
நாள் என்னில்
உன்
நினைவுகளால்
நிரப்பப்பட்டிருக்கும்.
இந்த
இதயங்கள்
தூரங்களில்
இருந்தாலும்
இதமான
நினைவுப் பாரங்களால்
நிரப்பப்பட்டிருக்கும்.
ரோஜாவின்
ஸ்பரிசமாய்
மெல்ல
எழும் நம் அன்புவெள்ளத்தில்
மேலும்
வளர வாழ்த்தும்
ப்ரியங்களுடன்
நானே.
உனக்குத்
தானே இனிக்கும் தேனே. J
